தி.மு.க., வெற்றி கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை! | Dinamalar

தி.மு.க., வெற்றி கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை!

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (7) | |
சென்னை:'தி.மு.க., வெற்றி பெற்றது என்றால், அது கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் போட்ட பிச்சை' என்று, கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து மதம், கோவில்கள், பிரதமர் பற்றியும், அவர் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், பனங்கரையில் சர்ச் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த, மாவட்ட
 தி.மு.க., வெற்றி கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை!

சென்னை:'தி.மு.க., வெற்றி பெற்றது என்றால், அது கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் போட்ட பிச்சை' என்று, கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து மதம், கோவில்கள், பிரதமர் பற்றியும், அவர் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், பனங்கரையில் சர்ச் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.


ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து அருமனையில், அருமனை கிறிஸ்துவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்துவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலில் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை.

மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் தரப்போவதில்லை; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால், அது கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சை. உங்களின் திறமையில் ஓட்டு வாங்கவில்லை. எங்கள் ஆயர்கள் கண் அசைப்பார்கள். பெந்தகொஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வர்.

நாங்கள் சுரேஷ்ராஜனிடம், கிறிஸ்துவர்கள் வாழும் பகுதிகளில் சென்று ஓட்டு கேட்கட்டுமா என்று கேட்ட போது, அவர் மறுத்து விட்டார்.நீங்கள் கிறிஸ்துவர்கள் பகுதியில் பிரசாரம் செய்தால், ஹிந்து ஓட்டுகள் கிடைக்காமல் போய் விடும் என்றார்.அங்க என்ன ஆச்சு எம்.ஆர்.காந்தி வெற்றி வெற்றார். நாடார்கள் வாழும் பகுதிகளில், 2,000 ரூபாய் கொடுத்து, 'நான் நாடார்; என்னை ஜெயிக்க வையுங்கள்' என்றார். நாடாருக்கு புத்தி உண்டா; அவர்களும், 'நம்ம ஆளு ஜெயிக்கட்டும்' என்று ஓட்டு போட்டனர்.

கடந்த, 1982ல் மண்டைக்காடு கலவரத்தில், ஏழு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் எம்.ஆர்.காந்தி. இவர் நாகர்கோவிலில் நாடார் என்று சொல்கிறார். அருமனையில் ஹிந்து என்று சொல்கிறார். தி.மு.க.,வில் உள்ள நாடார்களும் சேர்ந்து, சுரேஷ்ராஜனை தோற்கடித்தனர். எம்.ஆர்.காந்தி செருப்பு போடமாட்டார். பூமா தேவியை செருப்பு போட்டு மிதிக்க கூடாதாம்.

பாரத் மாதா மீது செருப்பு போட்டு மிதிக்க கூடாதாம். நம்ம ஏன் செருப்பு போடுறோம். பாரத் மாதாவின் அசிங்கம், நம் காலில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக. பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக.
கடைசி காலம்தமிழக அரசு இலவசமாக செருப்பு கொடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன், ஒரு நண்பர் தன் குழந்தைக்கு பெயர் போட வேண்டி வந்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு போய் வந்துள்ளீர்கள். நல்ல ஸ்டைலான பெயர் போடுங்கள் என்றார். 'ஸ்டேன் சாமி' என்று பெயர் வைத்தேன்.

அவரது மரணத்துக்கு ஐ.நா., சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு நோபல் பரிசு கிடைக்க போகிறது. அவ்வாறு கிடைக்கும் போது, மோடி, அமித்ஷாவின் முகத்தில் காறி துப்பும் நிகழ்ச்சியாக அமையும். மோடி, அமித் ஷா என, ஏதாவது ஒரு பி.ஜே.பி.,காரன் பெயர் போட்டானா; ஏன்னா அது அசிங்கமான பெயர். ஸ்டேன் சாமி சாக மாட்டார்; அவர் வாழ்வார்.

அப்படிப்பட்ட ஒரு இறை நம்பக்கையில் வாழ்வது தான் குமரி மாவட்ட கிறிஸ்துவ - முஸ்லிம் சமுதாயம். இந்த சமூகத்தை அழிக்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. நாம், 42 சதவீதத்தில் இருந்தோம். இன்று, 62 சதவீதத்தை தாண்டி போய் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறிது நாளில், 70 சதவீதம் ஆகி விடுவோம்.

பாதிரியார்னா மணி அடிக்கிற பூஜாரின்னு நினைக்காதீங்க; நல்லா படிச்சவங்க. ஸ்டேன் சாமி படித்தவர்; பேராசிரியர். ஆதிவாசி மக்களுக்காக வாழ்ந்தவர். அவரது காலில் விலங்கு மாட்டி சிறை கைதி போல மருத்துவமனையில் அடைத்து வைத்தாய். நாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். மோடியின் கடைசி காலம் மிகமிக பரிதாபமாக இருக்கும். நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால்... (தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி பாதிரியார் பேசிய வார்த்தைகள் இங்கு அச்சிட தகுந்தவை அல்ல) எங்கள் சாபம் உங்களை நிர்மூலமாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சர்ச்சை பேச்சால், தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாதிரியாரின் பேச்சுக்கு, பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.கைது செய்யக் கோரி குவியும் புகார்கள்!'பிரதமர், உள்துறை அமைச்சர் பற்றி அருவருப்பாக பேசியதுடன், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்' என, பா.ஜ., சட்டப்பிரிவு மாநில செயலர் அஸ்வத்தாமன், இந்து மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன் ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

அதேபோல, நாகையில், சிவசேனா மாநில செயலாளர் சுந்தரவடிவேலன்; கோவையில், பா.ஜ., சிறுபான்மை அணி தலைவர் வழக்கறிஞர் ஜோசன்; மதுரையில், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன்; கன்னியாகுமரியில், பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர், போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி.,க்களிடம் புகார் அளித்துள்ளனர். இதுபோல, தமிழகம் முழுதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில், ஹிந்து அமைப்புக்கள், பாதிரியாருக்கு எதிராக புகார் அளித்துள்ளன. இதையடுத்து, ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X