தமிழ்நாடு

'தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவாகும்'

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு எதிரான முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும்,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.,வை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் முருகன், விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய
 தமிழகம், முதன்மை, எதிர்க்கட்சி, பா.ஜ.,

''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு எதிரான முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும்,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.,வை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் முருகன், விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.


இரட்டிப்பு வேகம்புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் தலைமையில், கட்சியின் செயல்பாடு இரட்டிப்பு வேகம் எடுக்கும். தி.மு.க., ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார். தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ.,வை உருவாக்க அனைத்து முயற்சிகளும் நடக்கின்றன. செப்டம்பரில் மூன்று நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளேன்.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 11 பெண் அமைச்சர்களும், கோவையில் விரைவில் சந்திக்க உள்ளனர். மோடி அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் அமைச்சர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.


latest tamil newsதிட்டம்இந்த சாதனையை தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.தமிழகத்தில் மேலும் பல வெற்றிவேல் யாத்திரைகள் நடத்தப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பெற்றுள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
23-ஜூலை-202112:49:35 IST Report Abuse
Anbuselvan ஏதோ ஒரு திட்டம் உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம். தமிழகத்திற்கு நேரடியாக மக்களுக்கு தெரிகிற மாதிரி நன்மைகள் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூலை-202112:34:31 IST Report Abuse
anuthapi We never allow to enter BJP in tamilnadu. Tamilnadu people given assurance only DMK ever rule. Our nex chief Minister udhayanidhi already redy. Next our chief Minister his son also ready.ithu Periyar boomi.engalai yarum attavum mudiathu asikavum mudiyathu.Ellorum engal kaile.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
23-ஜூலை-202112:32:52 IST Report Abuse
Mayavan Mayavan என் கருத்து மற்றும் என் விருப்பம் தமிழ் நாட்டில் ஆட்சியில் அமரும் கட்சியாக பிஜேபி அடுத்த தேர்தலுக்குள் வளர்ந்துவிடும். இந்த உ பி ஸ் தொல்லை முடியல நாராயண.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X