பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத ஒருங்கிணைந்த அலுவலக வளாகம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு அருகே தேவிகுளத்தில் தாலுகா அளவிலான அனைத்து அலுவலகங்களை ஒரே இடத்தில் செயல்படும் வகையில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா கண்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.அங்கு தாலுகா,கிராம நிர்வாகம், பொது வினியோகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்,சர்வே உட்பட தாலுகா அளவிலான பல்வேறு அரசு அலுவலகங்கள் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனி

மூணாறு : கேரளா மூணாறு அருகே தேவிகுளத்தில் தாலுகா அளவிலான அனைத்து அலுவலகங்களை ஒரே இடத்தில் செயல்படும் வகையில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா கண்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

அங்கு தாலுகா,கிராம நிர்வாகம், பொது வினியோகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்,சர்வே உட்பட தாலுகா அளவிலான பல்வேறு அரசு அலுவலகங்கள் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனி கட்டடங்களில் செயல்படுகின்றன.அவை அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் தேவிகுளத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா 2016 ஏப்.,3ல் நடந்தது.

அங்கு மூணாறு சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் மட்டும் சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. மற்றவை காட்சிப்பொருளாக உள்ளன. புதிய கட்டடத்தில் அனைத்து அலுவலகங்களையும் மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X