ஏர்வாடியில் நிதிநிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏர்வாடியில் நிதிநிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி 

Added : ஜூலை 23, 2021
Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நகை அடகு கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரும், அண்ணன் கண்ணன் என்பவரும் செல்வி கோல்டு பைனான்ஸ் நடத்தி பல மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் பல லட்சம் மோசடி செய்தனர். 2013ல் மாவட்ட குற்றப்பிரிவில் இருவர் மீதும்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நகை அடகு கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரும், அண்ணன் கண்ணன் என்பவரும் செல்வி கோல்டு பைனான்ஸ் நடத்தி பல மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் பல லட்சம் மோசடி செய்தனர். 2013ல் மாவட்ட குற்றப்பிரிவில் இருவர் மீதும் வழக்கு உள்ளது.

இந்த நிலையில் சண்முகம் ஏர்வாடியில் விஜயன் கோல்டு பைனான்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வந்துள்ளார். இவரது அடகு கடையில் ஏர்வாடி, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் நகை அடகு வைத்துள்ளனர்.ஆனால் சண்முகம் கடையை மூடிவிட்டு தலைமறைவானார்.

ஏர்வாடியை சேர்ந்த ராபியா பீவி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் தனது 53 கிராம் தங்க நகைகளை மீட்டுத்தருமாறும், இதே போல் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராணி விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X