கூடலுார் பைபாஸ் பணியில் தொய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடலுார் பைபாஸ் பணியில் தொய்வு

Added : ஜூலை 23, 2021
Share
கூடலுார் : கூடலுாரில் பல மாதங்களாக பை பாஸ் பணிகள் நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் முதல் குமுளி வரை 160 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படும் இருவழிச்சாலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் ஆகிய ஊர்களில் பை பாஸ் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதில் கூடலுார் தவிர அனைத்து ஊர்களிலும்

கூடலுார் : கூடலுாரில் பல மாதங்களாக பை பாஸ் பணிகள் நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை 160 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படும் இருவழிச்சாலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் ஆகிய ஊர்களில் பை பாஸ் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதில் கூடலுார் தவிர அனைத்து ஊர்களிலும் இப்பணி முடிவடைந்துவிட்டது.

உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் இரு பகுதியில் மண் மேவும் பணி கிடப்பில் உள்ளது. கூடலுாரில் மந்தைவாய்க்கால், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு பகுதியில் பல மாதங்களாக எவ்வித பணியும் நடைபெறவில்லை.

மேலும் 18ம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணிகளும் முழுமை பெறாமல் உள்ளது. விரைவில் இப்பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வரவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X