முழு ஊரடங்கு அச்சத்தினால் முன்கூட்டியே பாதயாத்திரை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு அச்சத்தினால் முன்கூட்டியே பாதயாத்திரை

Added : ஜூலை 23, 2021
Share
வடமதுரை : கொரோனா ஊரடங்கு வாய்ப்புகளை எண்ணி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்கு பக்தர்கள் முன்கூட்டியே பாதயாத்திரை செல்கின்றனர்.வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை திருவிழா நடக்கும். இதற்காக ஆகஸ்ட் கடைசி இருவாரங்களில் அதிகளவில் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வர். கடந்தாண்டு இதே காலத்தில் கொரோனா பிரச்னையால்
 முழு ஊரடங்கு அச்சத்தினால் முன்கூட்டியே பாதயாத்திரை

வடமதுரை : கொரோனா ஊரடங்கு வாய்ப்புகளை எண்ணி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்கு பக்தர்கள் முன்கூட்டியே பாதயாத்திரை செல்கின்றனர்.

வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை திருவிழா நடக்கும். இதற்காக ஆகஸ்ட் கடைசி இருவாரங்களில் அதிகளவில் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வர். கடந்தாண்டு இதே காலத்தில் கொரோனா பிரச்னையால் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது தேவாலயம் திறந்து பக்தர்கள் தரிசன அனுமதி உள்ளது. இதனால் ஒரு மாதம் முன்கூட்டியே திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் வடமதுரை வழியே பாதயாத்திரையாக செல்கின்றனர்.

திண்டுக்கல் நாகல்நகர் சகாயபால்ராஜ் கூறுகையில், ''கடந்தாண்டு பாதயாத்திரை செல்ல முடியாதது ஏமாற்றமாக இருந்தது. முழுமையாக ஊரடங்கு தளர்வு இல்லாத சூழலில், மீண்டும் ஊரடங்கு, வெளியூர் பக்தர்களுக்கு தடை என ஏதாவது தடைவந்து விடக்கூடாதே என்று கருதி முன்கூட்டியே செல்கிறோம்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X