பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் நாப்கின் வழங்கும் மிஷின்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : பெண் போலீசார் நலன்கருதி திண்டுக்கல்லில் 27 இடங்களில் சானிட்டரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 500 க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பணியாற்றுகின்றனர். இவர்களின் நலன்கருதி நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்சானிட்டரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரத்தை எஸ்.பி.,

திண்டுக்கல் : பெண் போலீசார் நலன்கருதி திண்டுக்கல்லில் 27 இடங்களில் சானிட்டரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 500 க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பணியாற்றுகின்றனர். இவர்களின் நலன்கருதி நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்சானிட்டரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரத்தை எஸ்.பி., ரவளிப்பிரியா துவங்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., லாவண்யா உடனிருந்தார்.மாவட்டம் முழுவதும் 41 போலீஸ் ஸ்டேஷன்களை உள்ளடக்கி 27 இடங்களில் நாப்கின் வினியோகிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை வளாகத்தில் பணிக்குச் செல்லும் போலீசாரின் குழந்தைகளை பாதுகாக்கும் காப்பகத்தையும் எஸ்.பி., திறந்து வைத்தார். பணிக்கு செல்லும் போலீசார் தங்கள் குழந்தைகளை அலைபேசி வாயிலாக கண்காணிக்கும் வகையில் காப்பகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X