பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்; உழவர் கருத்து கேட்பில் வலியுறுத்தல்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
தேனி : பயிர்க்கடன் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தேனியில் நடந்த உழவர் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் உழவர் கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடந்தது. பதிவாளர் சண்முகசுந்தரம், கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார்

தேனி : பயிர்க்கடன் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தேனியில் நடந்த உழவர் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் உழவர் கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடந்தது. பதிவாளர் சண்முகசுந்தரம், கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்

பதிவாளர்: 60 ஆண்டுக்கு முன் ஏற்படுத்திய கூட்டுறவு சட்டம் உள்ளது. கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது அவசியம். இதில் 57 வகைதொழில்புரிவோர் சேர வேண்டும். அரசியல் கலப்பு இன்றி கருத்துக் கூறலாம்

வேங்கடபூபதி: சங்கங்களில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. கோர் பேங்கிங், ஏ.டி.எம். வசதி செய்திட வேண்டும். கடன் தர அதிக ஆவணங்கள் கோரி அலைக்கழிக்கின்றனர். இ-அடங்கலாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், பிரதமர் மருந்தகத்தில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவது போல் கூட்டுறவு மருந்து கடையில் வழங்க வேண்டும்.

காட்டுராஜா, குள்ளபுரம்: கொரோனாவால் விவசாயம் பாதித்தது. நிலத்தை அடமானம் வைத்து ரூ.1.75 லட்சம் கடன் பெற்றேன். கூடுதல் கடன் தர மறுக்கின்றனர். பால்மாடு கடன் வழங்க வங்கி மறுக்கிறது. நுாறுநாள் வேலை பணியாளர்களை விவசாய பணிக்கு வழங்க வேண்டும்.

சீனிராஜ், பள்ளபட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கூலி உயர்வால் பயிர்க்கடன் ரூ.3 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பால்சங்கங்கள் துவக்க தடையில்லா சான்று வழங்க வேண்டும்.கோரிக்கைகள் மீது அதிகாரிகள் பதில் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X