தமிழ்நாடு

கருணை காட்டுங்க சார்! அச்சுறுத்தும் ரோடு பாலங்களின் சேதமற்ற தடுப்புகள்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதிகளில் ரோடு பாலத்தின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ள நிலையில், பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாது குறித்த அறிவிப்பும் இல்லாமல் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளில் நீர் நிலைகள் குறுக்கிடுவதால் இங்கு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தில் தடுப்பு சுவர் இருந்தால்தான் டூ வீலர் ,கார் ,

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதிகளில் ரோடு பாலத்தின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ள நிலையில், பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாது குறித்த அறிவிப்பும் இல்லாமல் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.

மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளில் நீர் நிலைகள் குறுக்கிடுவதால் இங்கு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தில் தடுப்பு சுவர் இருந்தால்தான் டூ வீலர் ,கார் , பஸ் உள்ளிட்ட வானங்கள் கவனமாக செல்ல முடியும். ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்று விட முடியும். தற்போது பெரும்பாலான பாலங்களில் தடுப்பு சுவர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

இதன் காரணமாக வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. பல இடங்களில் ரோட்டின் வளைவில் உள்ள பாலங்களிலும் தடுப்பு சுவர் இல்லை. கொஞ்சம் அசந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதோடு பாலம் சேதம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பும் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு பாலங்களில் சேதமடைந்த தடுப்புகளை உடனடியாக சிரமைப்பது அவசியமாகிறது

.கொஞ்சம் அசந்தாலும் விபத்து:

மாவட்டத்தில் ரோடு பாலத்தின் சேதமடைந்துள்ள தடுப்புகளால் பகலில் செல்லும் வாகன ஓட்டிகள் ஓரளவிற்கு கவனத்துடன் சென்று தப்பி விடுவர். ஆனால் இரவில் கொஞ்சம் அசந்தாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வளைவுகளுக்கு அடையாளம் வைப்பது போல் குறுகிய பாலங்களுக்கும் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். முடிந்த வரையிலும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முத்துராஜ் , டிரைவர் , சிவகாசி...................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X