தமிழ்நாடு

25,535 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு; இதுவரை பயன் பெற்றவர்கள் 3705 பேர்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 535 கர்ப்பிணிகளுக்கு 'கோவிட்' தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புறத்தில் 14 சதவீதம், கிராமப்புறங்களில் 11.3 சதவீத கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது. 3705 பேர் பயன்பெற்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 50 பிரசவம் நடந்தாலும் குழந்தை பெற்ற பின் 10 பெண்களே தடுப்பூசி செலுத்த முன்வருகின்றனர்.

மதுரை : மதுரை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 535 கர்ப்பிணிகளுக்கு 'கோவிட்' தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறத்தில் 14 சதவீதம், கிராமப்புறங்களில் 11.3 சதவீத கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது. 3705 பேர் பயன்பெற்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 50 பிரசவம் நடந்தாலும் குழந்தை பெற்ற பின் 10 பெண்களே தடுப்பூசி செலுத்த முன்வருகின்றனர். கர்ப்பிணிகளில் தினமும் 5 பேர் வரையே சம்மதிக்கின்றனர்.மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்துள்ளது.

நகர்நல அலுவலர் குமரகுரு கூறுகையில்,''இதுவரை 1700 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். ஜூலை 30க்குள் 16 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்'' என்றார்.

கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் செல்வகாமாட்சி கூறியதாவது: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மேலுார் முதலிடம், கள்ளந்திரி 2ம் இடம், செக்கானுாரணி 3வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தினமும் 200 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது 50 பேர் வரையே பயன்பெறுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X