சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கொலை காதலன் தற்கொலை

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை குத்திக் கொலை செய்தவர், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரம்பலுார் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 22. இவர், கொளப்பாடி கிராமத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்கி வருவது வழக்கம். அப்போது, அங்கு எதிர் வீட்டில் வசிக்கும் அருள்பாண்டியன், 30 என்பவர் தனலட்சுமியை ஒருதலையாகக்

பெரம்பலுார்:ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை குத்திக் கொலை செய்தவர், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலுார் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 22. இவர், கொளப்பாடி கிராமத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்கி வருவது வழக்கம். அப்போது, அங்கு எதிர் வீட்டில் வசிக்கும் அருள்பாண்டியன், 30 என்பவர் தனலட்சுமியை ஒருதலையாகக் காதலித்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன், தனலட்சுமியை பெண் கேட்டுள்ளார்.

அருள்பாண்டியனுக்கு பெற்றோர் இல்லாததை காரணமாக கூறி, தனலட்சுமியின் பெற்றோர் பெண் தர மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அருள்பாண்டியன், தனலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தார்.நேற்று மதியம் 12:00 மணியளவில் கொளப்பாடி கிராமத்தில் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சிக்காக, உறவினருடன் டூ - வீலரில் வந்த தனலட்சுமியை வழிமறித்த அருள்பாண்டியன் சுலுக்கி எனும் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்து, தப்பி சென்றார். பின், தன் கோழிப்பண்ணைக்கு சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குன்னம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X