சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் வெட்டி கொலைமுதல் கணவர் ஆத்திரம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:தென்காசி அருகே, இரண்டாம் திருமணம் செய்து கொண்ட மனைவியை வெட்டிக் கொன்ற முதல் கணவர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், ஆலங் குளம் அருகே கல்லுாத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ், 28; மனைவி சங்கீதா, 26. இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று பகலில் சங்கீதா வீட்டில் இருந்தார்.அப்போது, அவரது வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் தர வேண்டும் என முகவரி
 பெண் வெட்டி கொலைமுதல் கணவர் ஆத்திரம்

திருநெல்வேலி:தென்காசி அருகே, இரண்டாம் திருமணம் செய்து கொண்ட மனைவியை வெட்டிக் கொன்ற முதல் கணவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆலங் குளம் அருகே கல்லுாத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ், 28; மனைவி சங்கீதா, 26. இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று பகலில் சங்கீதா வீட்டில் இருந்தார்.அப்போது, அவரது வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் தர வேண்டும் என முகவரி கேட்டு வந்த ஒரு நபர், வீட்டுக்குள் புகுந்து சங்கீதாவை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினார். வீரகேரளம்புதுார் போலீசார் விசாரணை நடத்தினர்.

சங்கீதாவிற்கும், அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த கண்ணன், 30 என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடால், இருவரும் போலீஸ் முன்னிலையில் பிரிந்து விட்டனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பின், பொன்ராஜுடன் சங்கீதாவிற்கு திருமணம் நடந்துள்ளது. தம்மை பிரிந்தவர் இன்னொரு திருமணம் செய்த ஆத்திரத்தில், கண்ணன் கொலை செய்தது தெரிந்தது. கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X