தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் வருகை குறித்த சுற்றறிக்கை சர்ச்சை

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வருகை குறித்த சுற்றறிக்கை சர்ச்சையில் மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னணியில் 'அரசியல்' தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சத்யசாய் நகர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மோகன்பாகவத் வந்தார். அவர் 'இசட்' பிளஸ் பாதுகாப்பில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக ரோடுகளை
 ஆர்.எஸ்.எஸ்., தலைவர் வருகை குறித்த சுற்றறிக்கை சர்ச்சை

மதுரை : மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வருகை குறித்த சுற்றறிக்கை சர்ச்சையில் மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னணியில் 'அரசியல்' தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சத்யசாய் நகர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மோகன்பாகவத் வந்தார். அவர் 'இசட்' பிளஸ் பாதுகாப்பில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக ரோடுகளை சீரமைத்து,தெரு விளக்குகளை பராமரிக்க உதவி கமிஷனர் சண்முகம் மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். 'இசட்' பாதுகாப்பு உள்ளவர்களுக்கு செய்யும் வழக்கமான முன் ஏற்பாடு பணிகள் தான் என்றாலும், சுற்றறிக்கையை விமர்சித்து சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.

சண்முகத் தை பணியில் இருந்து விடுவித்து கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.ஹிந்து மத தலைவருக்கு ஆதரவாக சண்முகம் செயல்பட்டதாக 'கதை' கட்டி அரசுக்கு சில அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். 'இசட்' பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்கு நன்றாக தெரிந்தும் சண்முகத்தை பலிகடாவாக்கி உள்ளனர்.


யார் அந்த கருப்பு ஆடு


மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையிலான அந்த சுற்றறிக்கை சமூக வலைதளத்தில் பரவியதே சர்ச்சைக்கு காரணம்.சமீபகாலமாக கமிஷனர் கையெழுத்திடும் முன்பே பத்திரிகை செய்தி சமூகவலைதளங்களில் 'லீக்' ஆகி வருகிறது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையே காரணம். அந்த 'கருப்பு ஆடு' யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X