தஞ்சையில் பாலியல் தொழில் 8 பேர் கைது; 11 பெண் மீட்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் பாலியல் தொழில் 8 பேர் கைது; 11 பெண் மீட்பு

Added : ஜூலை 23, 2021
Share
தஞ்சாவூர்:தஞ்சையில், 'மசாஜ்' சென்டர், வீடு என பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடத்திய எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். 11 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத் தில் ஒப்படைக்கப்பட்டனர்.தஞ்சாவூர் நகரில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு

தஞ்சாவூர்:தஞ்சையில், 'மசாஜ்' சென்டர், வீடு என பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடத்திய எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். 11 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத் தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் நகரில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட பகுதியில், நவரசக்கிளி என்ற மசாஜ் சென்டரில் போலீசார் நடத்திய சோதனையில், பாலியல் தொழில் நடத்திய சென்னையைச் சேர்ந்த முகமது முஸ்தபா, 40; ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ், 30, ஆகிய இருவர் சிக்கினர்.

இவர்கள் சென்னை, கோவை, ஈரோடு ஆகிய பகுதியில் இருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தியது தெரிந்தது. இதேபோல், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள டீக்கடை மாடியில், பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் பிரபு, 33; அவரது நண்பர்கள் கார்த்திக், 26; ஜெயபால், 25, ஆகிய மூவரும், டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழில் நடத்தியது தெரிந்தது.

மற்றொரு இடத்தில் வாடகை வீட்டில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய செந்தில்குமார், 56; மனைவி ராஜம், 50 மற்றும் உறவினர் கணேசன், 58, ஆகிய மூவரும் சிக்கினர். இதில் செந்தில்குமார், ராஜம் இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக, கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்து, மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட எட்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட 11 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X