பொது செய்தி

தமிழ்நாடு

மிரட்டும் சப்தத்தால் மிரட்சி; மாடுகளுடன் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசியில் ரோட்டில் திரியும் மாடுகள் வாகனங்களின் ஏர்ஹாரன் சப்தத்தால் மிரளும் நிலையில், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கிறது.சிவகாசி பகுதியில் மாட்டு உரிமையாளர்கள் பால் கறக்கும் நேரம் மட்டுமே மாடுகளை பிடித்துச் செல்கிறார்கள். பால் கறந்தவுடன் ரோட்டில் விட்டு விடுகின்றனர்.பி.எஸ்.ஆர்., ரோடு, சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, வேலாயுதம் ரஸ்தா,

சிவகாசி : சிவகாசியில் ரோட்டில் திரியும் மாடுகள் வாகனங்களின் ஏர்ஹாரன் சப்தத்தால் மிரளும் நிலையில், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கிறது.

சிவகாசி பகுதியில் மாட்டு உரிமையாளர்கள் பால் கறக்கும் நேரம் மட்டுமே மாடுகளை பிடித்துச் செல்கிறார்கள். பால் கறந்தவுடன் ரோட்டில் விட்டு விடுகின்றனர்.பி.எஸ்.ஆர்., ரோடு, சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, வேலாயுதம் ரஸ்தா, காமராஜர் சிலை, காமராஜர் பூங்கா, சாட்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் ரோட்டிலேயே நடமாடுகின்றன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களான காலை, மாலையில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மாடுகள் ரோட்டினை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அடிக்கும் 'ஹார்ன்' சப்தத்தில் மிரண்டு ஓடுகின்றன. அப்போது டூ வீலர், சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். ஒரு சில மாடுகள் கண்டுகொள்ளாமல் அப்படியே நின்று போக்குவரத்திற்கு இடையூறினை ஏற்படுத்துகிறது.

நடந்து செல்பவர்கள் மிரட்சியுடனே செல்ல வேண்டியுள்ளது. இவைகளின் கழிவுகளும் ரோட்டிலேயே கிடந்து சிரமத்தினை ஏற்படுத்துகிறது. மாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X