பொது செய்தி

தமிழ்நாடு

மழையிலும் நீரை காணாத கண்மாய்கள்; பிரச்னைகளின் பிடியில் தெற்குபட்டி மக்கள்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மழைக்காலங்களில் கூட தண்ணீர் வராது வறண்டு காணப்படும் கண்மாய்கள், நடந்தால் கால்களை பதம் பார்க்கும் சேதமுற்ற ரோடு என பாலவநத்தம் ஊராட்சியில் உள்ள தெற்குபட்டி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு ஆண்டு கணக்காகிறது.மெயின் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. இருசக்கர வாகனங்களில் சென்றால்

அருப்புக்கோட்டை : மழைக்காலங்களில் கூட தண்ணீர் வராது வறண்டு காணப்படும் கண்மாய்கள், நடந்தால் கால்களை பதம் பார்க்கும் சேதமுற்ற ரோடு என பாலவநத்தம் ஊராட்சியில் உள்ள தெற்குபட்டி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இப்பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு ஆண்டு கணக்காகிறது.மெயின் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. இருசக்கர வாகனங்களில் சென்றால் 'டயர்பஞ்சர்' ஆகிறது. வயதானவர்கள், சிறுவர்களால் ரோட்டில் நடந்து செல்ல முடிவதில்லை. ஊரில் உள்ள வங்கி ஏ.டி.எம்., ல் பணம் இருப்பதே இல்லை. எந்நேரத்தில் பணம் இருக்கும் என்று கேட்கும் அளவிற்கு அதன் செயல்பாடு உள்ளன.

பெரிய கண்மாயின் நீர்வரத்து வழிகள் அடைபட்டதால் மழை நீர் சேகரிக்க முடியவில்லை. மழை காலத்திலும் கூட கண்மாய் வறண்டு தான் காணப்படுகிறது. புது கண்மாயிலும் ஓடைகள் பரமாரிப்பு இன்றி தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதேபோன்று சிறு ஊரணிகளிலும் இதே நிலையே உள்ளது. நீர்வரத்து ஓடைகளை துார்வாரி மழை நீர் சேகரம் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X