சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மாயம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் குளமாவ் அணையில் மீன் பிடிக்கச் சென்ற முல்லக்கானம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிஜூ 38, பினு 36, மாயமாகினர்.இருவரும் அணையின் நீர்தேக்க பகுதியான சக்கிமாலி பகுதியில் மீன் பிடிப்பதற்கு ஜூலை 20ல் வலை கட்டினர். அதனை எடுக்க நேற்று முன்தினம் அதிகாலை சென்றவர்கள் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இருவரும் தண்ணீருக்குள் மாயமானதாக
 மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மாயம்

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் குளமாவ் அணையில் மீன் பிடிக்கச் சென்ற முல்லக்கானம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிஜூ 38, பினு 36, மாயமாகினர்.இருவரும் அணையின் நீர்தேக்க பகுதியான சக்கிமாலி பகுதியில் மீன் பிடிப்பதற்கு ஜூலை 20ல் வலை கட்டினர். அதனை எடுக்க நேற்று முன்தினம் அதிகாலை சென்றவர்கள் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இருவரும் தண்ணீருக்குள் மாயமானதாக தெரியவந்தது.

தீயணைப்பு துறையினர் இரவு 10:00 மணிக்கு தேடுதல் பணியை துவக்கினர். பலத்த காற்று, மழையால் நள்ளிரவில் தேடுதல் பணியை முடித்தனர்.தொடுபுழா, மூலமற்றம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புதுறையினர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் நேற்று காலை முதல் தேடினர். அதில் கண்ணம்கயம் பகுதியில் இருந்து மாயமானவர்கள் பயன்படுத்திய படகு, வலை, அலைபேசி சிக்கின. பலத்த மழை, காற்றால் மதியம் 3:00 மணிக்கு தேடுதல் பணி கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X