அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின்கட்டணம் 'ஷாக்' அடிக்குது: பா.ஜ., இளைஞரணி தலைவர் கிண்டல்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
பழநி:'தமிழகத்தில் மின்சாரகட்டண பில்லை தொட்டாலே 'ஷாக்' அடிக்கிறது' என, -பழநியில் பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து 75 நாட்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கொரோனா காரணமாக கடந்த முறை மின்கட்டண அளவீடு எடுக்காத
 மின்கட்டணம் 'ஷாக்' அடிக்குது: பா.ஜ., இளைஞரணி தலைவர் கிண்டல்

பழநி:'தமிழகத்தில் மின்சாரகட்டண பில்லை தொட்டாலே 'ஷாக்' அடிக்கிறது' என, -பழநியில் பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து 75 நாட்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கொரோனா காரணமாக கடந்த முறை மின்கட்டண அளவீடு எடுக்காத நிலையில், தற்போது ஆயிரக்கணக்கில் மின் கட்டண பில் தொகை வருகிறது.

மின்கட்டண பில்லை தொட்டாலே 'ஷாக்' அடிக்கும் அளவுக்கு உயர்ந்து உள்ளது.'பெகாசஸ்' உளவு மென்பொருள் ஒரு துளிகூட உண்மையில்லாத விஷயம். விளக்கம் அளிக்க விடாமல் பார்லிமென்டில் அமளி செய்கின்றனர். பா.ஜ., ஆட்சியில் எந்த ஊழலும் நடக்கவில்லை.

எனவே நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளனர்.கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், ஹிந்து மக்களையும் இழிவாக பேசியிருப்பது மதக்கலவரத்தை தூண்டுவது போல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X