சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: மாவட்டம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., செயலர் மீது 'குண்டாஸ்'தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை அடுத்த கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர்செந்தில், 53. அ.தி.மு.க., மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலர். 2020ம் ஆண்டு நடந்த ராஜேஷ் என்பவர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, மதுக்கூர் போலீசார், கடந்த 14ம் தேதி விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.அங்கிருந்து செந்தில் தப்பினார். 16ம் தேதி செந்திலை

அ.தி.மு.க., செயலர் மீது 'குண்டாஸ்'

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை அடுத்த கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர்செந்தில், 53. அ.தி.மு.க., மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலர். 2020ம் ஆண்டு நடந்த ராஜேஷ் என்பவர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, மதுக்கூர் போலீசார், கடந்த 14ம் தேதி விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.அங்கிருந்து செந்தில் தப்பினார். 16ம் தேதி செந்திலை போலீசார் சென்னையில் கைது செய்தனர். தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு

கோவை: கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதில், 'கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் என்னை பற்றி பல்வேறு அவதுாறுகளை பதிவு செய்து, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்' என குறிப்பிட்டிருந்தார். இருவர் மீதும் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேடரபள்ளியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி; 10ம் வகுப்பு படித்து வந்தார். 21ம் தேதி, 'ஆன்லைன்' வகுப்பை கவனிக்காமல், கேம் விளையாடியதை அவரது தந்தை கண்டித்துள்ளார். மனமுடைந்த மாணவி அன்று பிற்பகல் 3:30 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

116 போலீசார் 'டிரான்ஸ்பர்'

திருச்சி: திருச்சி மாநகரில் 14 போலீஸ் ஸ்டேஷன்களும், நான்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளன. இவற்றில் 350க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் எஸ்.எஸ்.ஐ., ஏட்டு மற்றும் பெண் போலீசார் உட்பட 116 பேரை, திருச்சி மாநகரிலேயே வேறு ஸ்டேஷன்களுக்கு பணியிட மாறுதல் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு செயலர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே இ.கோட்டைப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, 2014 - 15ல் செயலராக இருந்தவர்கள் சுப்பையா, 63; குணசேகரன், 46. சங்கத்தின் கணக்குகளை தணிக்கை செய்தபோது, இவர்கள் 2.9 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. இதற்கு விற்பனையாளர் ராமசாமி உடந்தை.உசிலம்பட்டி துணை பதிவாளர் மதி புகாரில், மூவர் மீதும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சுப்பையா, குணசேகரன் கைது செய்யப்பட்டனர். ராமசாமி, சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.

ஏட்டை மிரட்டிய மூவர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டனம் மாவட்டம், வெளிப்பாளையம் போலீஸ் ஏட்டு வெங்கடேசன், 45; நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அவ்வழியே வந்த மூவர், 'அடிக்கடி ரோந்து வந்தால் வண்டியை ஏற்றி கொலை செய்து விடுவோம்' என மிரட்டும் வகையில் பேசினர். வெங்கடேசன் புகார்படி, 24 - 30 வயதுள்ள மூவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X