பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி உதவி கமிஷனரை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு ரோடுகளை சீரமைக்க சுற்றறிக்கை அனுப்பியதால், பணியில்இருந்து விடுவிக்கப்பட்ட உதவி கமிஷனர் சண்முகத்தை, மீண்டும் பணியமர்த்த பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மதுரை பால்பாண்டி தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இசட்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும்

மதுரை : மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு ரோடுகளை சீரமைக்க சுற்றறிக்கை அனுப்பியதால், பணியில்இருந்து விடுவிக்கப்பட்ட உதவி கமிஷனர் சண்முகத்தை, மீண்டும் பணியமர்த்த பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மதுரை பால்பாண்டி தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இசட்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் வருகைக்காக வழக்கமாக மேற்கொள்ளும் ரோடு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்ய உதவி கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.எம்.பி. சு.வெங்கடேசன் கமிஷனரை மிரட்டி, உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்.

நியாயமான காரணமில்லாமல் உதவி கமிஷனரை காத்திருப்போர் பட்டியலில்வைத்த மாநகராட்சி கமிஷனரை மாற்றி, உதவி கமிஷனரை அதே பணியில் அமர்த்த வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X