அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒட்டு கேட்பு விவகாரம் கிருஷ்ணசாமி கோரிக்கை

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை:'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய, மத்திய அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படுவோர் நடமாட்டம், போன் உள்ளிட்ட சாதனங்களை உளவுத்துறையினர் கண்காணிப்பது பல்லாண்டு காலமாக இருக்கக் கூடிய ஒன்று தான்.தற்போது

மதுரை:'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய, மத்திய அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படுவோர் நடமாட்டம், போன் உள்ளிட்ட சாதனங்களை உளவுத்துறையினர் கண்காணிப்பது பல்லாண்டு காலமாக இருக்கக் கூடிய ஒன்று தான்.தற்போது வெளியாகி உள்ள பெகாசஸ், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உளவு செயலியாகும். இதுபோன்ற செயலிகளை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவது வேறு. அரசியல் ரீதியாக செயல்படும் எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி தலைவர்களின் போன்களை உளவு பார்க்க பயன்படுத்துவது பேராபத்தானது.

இஸ்ரேலின் உளவு செயலி மூலம் இந்திய தலைவர்களை உளவு பார்க்க அனுமதித்தது சட்டவிரோதம். இதை விலை கொடுத்து வாங்கியது யார், பயன்படுத்த அனுமதித்தது யார் என மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X