மதுரை:'இதயம்' அறக்கட்டளை நிர்வாகிகளால் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக, சென்னை மனித உரிமை கமிஷனில், வருவாய் அலுவலர்கள் ஆஜராயினர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கிய, 'இதயம்' அறக்கட்டளை தலைவர் சிவகுமார். இவர் ஆதரவற்ற நிலையில், தன் அறக்கட்டளையில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை இறந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, வேறு ஒரு தம்பதிக்கு விற்றது தெரிந்தது. இதுபோல மற்றொரு குழந்தையையும் சட்ட விரோதமாக விற்றார்.
இது குறித்து விசாரித்து சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, நிர்வாகி மதர்ஷா உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மனித உரிமை கமிஷன், விளக்க மளிக்க தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், வடக்கு தாசில்தார் முத்துவிஜயகுமார், வி.ஏ.ஓ., முத்துமொழி, கிராம உதவியாளர் சம்பத் ஆகியோருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. இன்ஸ்பெக்டர் கடந்த வாரம் ஆஜரானார்.நேற்று தாசில்தார் உள்ளிட்ட மூவரும் சென்னையில், கமிஷன் டி.எஸ்.பி., சுந்தரேசன் முன் ஆஜராயினர். அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், நடந்த சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement