சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மனைவி உதவியுடன் மணல் கடத்தியவர் ஓட்டம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
திருச்சி:போலீசாக பணியாற்றும் மனைவி உதவியுடன், மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் ஸ்டேஷனில் நீலாவதி என்ற போலீஸ் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நல்லமுத்து, 35. நீலாவதி, இதற்கு முன் ஜம்புநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.அப்போதே அவரது கணவர் நல்லமுத்து, கண்ணனுார் பகுதி ஆற்றில் இருந்து மணல்
 போலீஸ் மனைவி உதவியுடன் மணல் கடத்தியவர் ஓட்டம்

திருச்சி:போலீசாக பணியாற்றும் மனைவி உதவியுடன், மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் ஸ்டேஷனில் நீலாவதி என்ற போலீஸ் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நல்லமுத்து, 35. நீலாவதி, இதற்கு முன் ஜம்புநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.அப்போதே அவரது கணவர் நல்லமுத்து, கண்ணனுார் பகுதி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்துள்ளார். இவருக்கு உறுதுணையாக, நீலாவதி இருந்துள்ளார்.

மணல் கடத்தலில் அதிகம் சம்பாதித்த நல்லமுத்து, 'டிப்பர் லாரி, பொலீரோ ஜீப் மற்றும் சொகுசு கார்' வாங்கி விட்டார். மணல் கடத்திய வழக்கில், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கு முன், துறையூர் ஸ்டேஷனுக்கு நீலாவதி மாற்றலாகி வந்து விட்டார்.

இங்கு வந்த பின்னரும், போலீசாரின் ரோந்து பற்றிய விபரங்களை தெரிந்து, அதற்கேற்ப கணவர் மணல் கடத்த உதவி உள்ளார்.இதற்காக, போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக இருக்கும் செந்தில் உட்பட மற்ற போலீசாருக்கும் மாமூல் கொடுத்துள்ளார். மூன்று நாட்களாக நீலாவதி விடுமுறையில் இருந்த நிலையில், நல்லமுத்துவின் டிப்பர் செம்மண் கடத்தும் போது ஆத்துார் ரோட்டில் பிடிபட்டது. டிரைவர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தகவலறிந்த நீலாவதி, நேற்று மதியம் அதை விடுவிக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து, நல்லமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாகி விட்டார். இதேபோல் துறையூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவரின்கணவரும், டிப்பர் வைத்து மணல் கடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X