சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேக்கரி உரிமையாளர் உடல் தோண்டி எடுப்பு 

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி அருகே, பேக்கரி உரிமையாளரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர்பத்மநாபன், 55; ஏரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி கடை நடத்தி வந்தார். 2019 ஏப்ரல் 1ல், மணப்பாக்கம் விநாயகர் கோவில் அருகில் தலையில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தார்.மது குடித்து வரும்போது கீழே
 பேக்கரி உரிமையாளர் உடல் தோண்டி எடுப்பு 

பண்ருட்டி:பண்ருட்டி அருகே, பேக்கரி உரிமையாளரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர்பத்மநாபன், 55; ஏரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி கடை நடத்தி வந்தார். 2019 ஏப்ரல் 1ல், மணப்பாக்கம் விநாயகர் கோவில் அருகில் தலையில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தார்.மது குடித்து வரும்போது கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனக் கருதிய அவரது உறவினர்கள், உடலை அடக்கம் செய்து விட்டனர்.

இந்நிலையில், 2019 ஜூன் 4ல் நடந்த ஒரு கொலை வழக்கில் விஸ்வநாதன், 29; வெங்கடேசன், 29; வேலாயுதம், 42, ஆகியோரை பண்ருட்டி போலீசார் கடந்த ஏப்ரல் 13ல் கைது செய்தனர். விசாரணையில், '2019 ஏப்ரல் 1ல், மணப்பாக்கம் விநாயகர் கோவில் அருகில் துாங்கிக் கொண்டிருந்த பேக்கரி உரிமையாளர் பத்மநாபன் தலையில் கல்லை போட்டு விஸ்வநாதன் கொலை செய்தது தெரிந்தது.

அவர் அணிந்திருந்த அரை சவரன் மோதிரங்கள் - 2 மற்றும் 13 ஆயிரத்தை திருடிச் சென்றதாகவும் விஸ்வநாதன் வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து, நேற்று காலை 9:00 மணிக்கு மணப்பாக்கம் சுடுகாட்டில், பத்மநாபன் உடலை தோண்டி எடுத்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் கீதா அஞ்சலி தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X