பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை பீபிகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பீபிகுளம் கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், அரசுத்துறை கட்டடங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை பீபிகுளம்-முல்லைநகர் குடியிருப்போர் நலச் சங்கம் செயலாளர் பாண்டியராஜ் தாக்கல் செய்த மனு:பீபிகுளம் நேதாஜி மெயின் ரோட்டில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் 5000 குடும்பங்கள்

மதுரை : மதுரை பீபிகுளம் கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், அரசுத்துறை கட்டடங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை பீபிகுளம்-முல்லைநகர் குடியிருப்போர் நலச் சங்கம் செயலாளர் பாண்டியராஜ் தாக்கல் செய்த மனு:பீபிகுளம் நேதாஜி மெயின் ரோட்டில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் 5000 குடும்பங்கள் உள்ளன. பீபிகுளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ளதாகவும், காலி செய்யுமாறும் பொதுப்பணித்துறை 2018ல் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

2020 டிசம்பரில் நீதிமன்றம், 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் அளிக்க வேண்டும். விளக்கத்தின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை ராஜாக்கூர் குடிசை மாற்றுவாரிய இடம் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,' என உத்தரவிட்டது.

எங்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. மாற்று இடம் ஒதுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மின் இணைப்பை துண்டிக்க மற்றும் வீடுகளை அகற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளை அகற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பாண்டியராஜ் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு,'சிலர் 100 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர்.. அப்பகுதியில் வசிப்போரில் சிலர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்,' என தெரிவித்தது. நீதிபதிகள்: 100 கடைகளை அகற்றியுள்ளதாக அரசுத் தரப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இப்பகுதியில் சிலர் வீடுகளை கட்டி மூன்றாம் நபர்களுக்கு வாடகைக்குவிட்டுள்ளனர். அந்த வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.அரசுத்துறைகளின் கட்டடங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்களை அகற்ற வேண்டும். டாஸ்மாக் கடை வாடகைக் கட்டடத்தில் செயல்படுகிறது. அக்கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் அதையும் அகற்ற வேண்டும்.

டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இப்பகுதியில் வசிப்போரில் உண்மையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காண வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, குடிசைமாற்றுவாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அக்குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு இந்நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X