சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
வீட்டில் 875 கிலோரேஷன் அரிசி பறிமுதல்மதுரை: பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி ஜெயகுமார் 56. இவரது வீட்டில் 35 மூடைகளில் 875 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு வாங்கி ஓட்டல்கள், மாட்டு தீவனத்திற்கு விற்றது தெரிந்தது. அவரையும், வாகன ஓட்டுனர் சிம்மக்கல் வினோத்தையும் 36,உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.'17'க்கு குழந்தை:

வீட்டில் 875 கிலோரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை: பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி ஜெயகுமார் 56. இவரது வீட்டில் 35 மூடைகளில் 875 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு வாங்கி ஓட்டல்கள், மாட்டு தீவனத்திற்கு விற்றது தெரிந்தது. அவரையும், வாகன ஓட்டுனர் சிம்மக்கல் வினோத்தையும் 36,உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

'17'க்கு குழந்தை: '50' கைது

மதுரை: ஆனையூர் பாக்கியம் 50. இவரது உறவினரின் 17 வயது மகளை திருமணம் செய்தார். சமீபத்தில் அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நல பாதுகாப்பு உறுப்பினர் சண்முகம் புகாரில் பாக்கியத்தை தல்லாகுளம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கந்துவட்டி வழக்கு

மதுரை: அண்ணாநகர் இந்திரா காலனி தேன்மொழி 37. சதாசிவ நகர் காளீஸ்வரியிடம் 28, கடந்த பிப்.,ல் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். ரூ.1.30 லட்சம் செலுத்திய நிலையில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக கந்துவட்டி வழக்கின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருடிய பெண் கைது

மதுரை: சின்னசொக்கிகுளத்தில் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு அலைபேசிகளை திருடியதாக திருத்தணி ரீத்ப்ரியா 21, கைது செய்யப்பட்டார்.

விவசாயி பலி

மேலுார்: நாகலிங்கபுரம் விவசாயி சுந்தரம்68. நேற்றுக்காலை தெற்கு தெருவில் டூவீலருக்கு பெட்ரோல் போட்டவர் சொந்த ஊருக்கு திரும்பினார். ஹெல்மெட் அணியவில்லை. பின்னால் மதுரை- - திருச்சி நோக்கி சென்ற கார் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

காப்பகத்தில் தங்கியவர் கர்ப்பம்: விசாரணை

மதுரை: முத்துப்பட்டியில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு ஆண், பெண்கள் தங்கியுள்ளனர். பெற்றோரை இழந்த ஆரப்பாளையம் 45 வயது பெண்ணும் தங்கியுள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமுற்றார். இதுதொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரணை நடக்கிறது.

தொழிலாளி பலி

கொட்டாம்பட்டி: தனிச்சியம் விவசாய கூலி தொழிலாளி ராமசாமி 38. நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரி மருத்துவமனையில் உறவினரை பார்க்க டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் நிறுத்தியிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் ராமசாமி இறந்தார். எஸ். ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X