பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஆக.3 வரை போலீஸ் உடற்தகுதி தேர்வு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை : தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. மதுரை நகரில்தகுதி பெற்ற1700பேருக்கு ஆக.,3 வரை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.இதில் பங்கேற்போர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வரவேண்டும். அதற்கு முன்னதாக 4 நாட்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதன் அசல் சான்று,

மதுரை : தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. மதுரை நகரில்தகுதி பெற்ற1700பேருக்கு ஆக.,3 வரை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்போர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் வரவேண்டும். அதற்கு முன்னதாக 4 நாட்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதன் அசல் சான்று, இணையதளத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க சமர்ப்பித்த சான்றுகளின் அசல், நகல்கள் மற்றும் அழைப்பு கடிதத்துடன் வரவேண்டும். முகக்கவசம் கட்டாயம்.

அழைப்பு கடிதத்தில் போட்டோ இல்லாமல் இருந்தால் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்,அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை எடுத்து வரவேண்டும்.விண்ணப்பத்தாரர்கள் எந்த வாசகமும், அடையாள அச்சும் இல்லாத பல வண்ணங்கள் இல்லாத மேல்சட்டை, கால் சட்டை அணிந்து வரவேண்டும் எனகமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹாதெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X