பொது செய்தி

தமிழ்நாடு

'உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கடைகளுக்கு சீல்': உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை : விதிகளை மீறி உரிமம் மாற்றம் செய்யப்பட்ட உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கடைகளுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் அம்மாவாசை தாக்கல் செய்த பொதுநல மனு:உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குட்பட்ட கடைகள் தேனி ரோட்டில் உள்ளன. இவற்றில் 9 கடைகளுக்கு உரிமம் பெற்றவர்களுக்கு பதிலாக வேறு சிலருக்கு உரிமம் மாற்றம்

மதுரை : விதிகளை மீறி உரிமம் மாற்றம் செய்யப்பட்ட உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கடைகளுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் அம்மாவாசை தாக்கல் செய்த பொதுநல மனு:உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குட்பட்ட கடைகள் தேனி ரோட்டில் உள்ளன. இவற்றில் 9 கடைகளுக்கு உரிமம் பெற்றவர்களுக்கு பதிலாக வேறு சிலருக்கு உரிமம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் உள்ளது. இதனால் தனிநபர்கள் பயனடைவர்.ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

டெண்டர் நடத்தி உரிமம் மாற்றம் செய்யவில்லை. 9 கடைகளுக்கும் சீல் வைக்க வேண்டும். உரிமம் மாற்றத்திற்கான தீர்மானத்திற்கு தடை விதிக்க வேண்டும். உரிமம் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அம்மாவாசை குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: உரிமம் மாற்றம் தொடர்பான அனைத்து மேல்நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை உதவி இயக்குனர் 'சீல்' வைத்து மூட வேண்டும்.ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர், மதுரை கலெக்டர், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X