ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை தேவை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை தேவை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை:''இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியை பயன்படுத்தி அலைபேசி ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய மத்திய அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவதாக கருதப் படுவோர் நடமாட்டம், அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை உளவுத்துறையினர்

மதுரை:''இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியை பயன்படுத்தி அலைபேசி ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய மத்திய அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவதாக கருதப் படுவோர் நடமாட்டம், அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை உளவுத்துறையினர் கண்காணிப்பது பல்லாண்டு காலமாக இருக்க கூடிய ஒன்று தான். தற்போது வெளியாகியுள்ள பெகாசஸ் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உளவு செயலியாகும்.

இதுபோன்ற செயலிகளை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவது வேறு. அரசியல் ரீதியாக செயல்படும் எதிர்கட்சி, கூட்டணி கட்சி தலைவர்களின் அலைபேசிகளை உளவுபார்க்க பயன்படுத்துவது பேராபத்தானது. இஸ்ரேலின் உளவு செயலி மூலம் இந்திய தலைவர்களை உளவு பார்க்க அனுமதித்தது சட்டவிரோதம். இதை விலைகொடுத்து வாங்கியது யார், பயன்படுத்த அனுமதித்தது யார் என மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X