அரசியல் செய்தி

தமிழ்நாடு

நகராட்சிகள், பேரூராட்சிகளில் புறவழிச்சாலை : மதுரையில் அமைச்சர் வேலு தகவல்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுரை:''நகராட்சிகள், அதிக மக்கள் கொண்ட பேரூராட்சிகளில் புறவழிச்சாலை அமைக்கப்படும். சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் டெண்டர் முறை ஒழிக்கப்படும்,'' என மதுரையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடந்த ஐந்து மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஒன்றிய, ஊராட்சி சாலைகளை தரம் உயர்த்த

மதுரை:''நகராட்சிகள், அதிக மக்கள் கொண்ட பேரூராட்சிகளில் புறவழிச்சாலை அமைக்கப்படும். சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் டெண்டர் முறை ஒழிக்கப்படும்,'' என மதுரையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடந்த ஐந்து மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வேலு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஒன்றிய, ஊராட்சி சாலைகளை தரம் உயர்த்த எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர். ஆண்டுக்கு 2000 கி.மீ., வீதம் ஐந்தாண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ., ஒன்றிய, ஊராட்சி சாலைகள் தரம் உயர்த்தப்படும். நில எடுப்பில் ஏற்படும் சில பிரச்னைகளால் சாலை பணிகளை நிறைவேற்ற தாமதமாகிறது. இதனால் நில எடுப்புக்காக ஐந்து டி.ஆர்.ஓ.,க்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ரயில் பாலங்கள் அமைப்பதில் கால தாமதத்தை தவிர்க்க ரயில்வே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. சாலை ஓரங்களில் மரங்களை கட்டாயம் நட வேண்டும். கலெக்டர்கள் நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் இணைந்து மரங்களை நட அறிவுறுத்தப்பட்டது.பழநி-கொடைக்கானல் சாலை தரம் உயர்த்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும். கொடைக்கானல் - மூணாறு சாலை கேரள அரசுடன் பேசி தரம் உயர்த்தப்படும்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்ட அருங்காட்சியகம் அமையவுள்ளதால் அந்த ரோடும் மேம்படுத்தப்படும்.திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பால விஷயங்களில் பத்தாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அதிக பாலங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.

மதுரையில் கோரிப்பாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். மதுரையில் ரூ.70 கோடியில் எட்டு மாடிகளுடன் அமையும் நுாலகத்திற்கு புது நத்தம் ரோடு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தை ஆய்வு செய்தோம். முதல்வர் ஸ்டாலின் இறுதி செய்து அறிவித்த பின் கட்டுமான பணி துவங்கும்.மாமல்லபுரம் போன்ற கடல் பகுதியில் அலைகள் அதிகம்.

எனவே சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு இல்லை.முந்தைய ஆட்சியில் பேக்கேஜிங் முறையில் தனிநபர்களுக்கு டெண்டர் விடப்பட்டன. அம்முறை ஒழிக்கப்படும். எல்லா பணிகளும் வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு நடக்கும் என்றார். அமைச்சர்கள் சக்ரபாணி, மூர்த்தி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X