பூட்டிய வீட்டில் 15 மாதங்கள் அடைந்து கிடந்த குடும்பத்தினர் மீட்பு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
கிழக்கு கோதாவரி:ஆந்திராவில் கொரோனா வைரசுக்கு பயந்து 15 மாதங்களாக வீட்டில் அடைந்து கிடந்த குடும்பத்தினர் மீட்கப்பட்டுள்ளனர்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலி கிராமத்தில் கூரை வீட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குருநாத் ருத்தம்மா காந்தாமணி ராணி ஆகியோர் வசித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு இவர்களின் உறவினர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து குருநாத்

கிழக்கு கோதாவரி:ஆந்திராவில் கொரோனா வைரசுக்கு பயந்து 15 மாதங்களாக வீட்டில் அடைந்து கிடந்த குடும்பத்தினர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலி கிராமத்தில் கூரை வீட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குருநாத் ருத்தம்மா காந்தாமணி ராணி ஆகியோர் வசித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு இவர்களின் உறவினர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து குருநாத் குடும்பம் தங்களையும் கொரோனா தாக்கும் என்ற அச்சத்தில் 15 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடந்துள்ளனர்.

இந்நிலையில் குருநாத்திற்கு அரசு திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான ஆவணத்தில் கையெழுத்துப் பெற கிராம அதிகாரி ஒருவர்குருநாத் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் குருநாத் வீட்டை திறக்க மறுத்து விட்டார்.கிராம அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது தான் 15 மாதங்களாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பது தெரியவந்தது.இது குறித்து போலீசார் கூறியதாவது:மீட்கப்பட்ட குடும்பத்தினரின் தோற்றம் பரிதாபமாக இருந்தது. காட்டு மனிதர் போல தலைமுடி தாடியுடன் குருநாத் காணப்பட்டார். 15 மாதங்களாக குளிக்காமல் இருந்ததால் குடும்பத்தினர் மீது துர்நாற்றம் வீசியது.அந்த வீட்டிற்குள்ளேயே அவர்கள் இயற்கை உபாதைகளை கழித்து வந்ததால் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்.உடல் மெலிந்து இன்னும் சில நாட்களில் இறக்கும் நிலையில் காணப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X