சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'முட்டை விலை ரூ.2.24: நம்ப வேண்டாம்'

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
நாமக்கல்:'ரூ.2.24க்கு முட்டை விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை நம்பி மக்கள் ஏமாற்றம் அடையகூடாது' என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து நிருபர்களிடம் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:சமீபத்தில் வெளியான (தினமலர் நாளிதழில் அல்ல) விளம்பரம் ஒன்றில்ஒரு முட்டை 2.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும்

நாமக்கல்:'ரூ.2.24க்கு முட்டை விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை நம்பி மக்கள் ஏமாற்றம் அடையகூடாது' என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:சமீபத்தில் வெளியான (தினமலர் நாளிதழில் அல்ல) விளம்பரம் ஒன்றில்ஒரு முட்டை 2.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டை உற்பத்தி செலவே 4.80 ரூபாய் ஆகிறது. அதிலும் வீடு வீடாக சென்று வழங்குவது என்பதை ஆச்சரியமாக தான் பார்க்கிறோம்.

சத்துணவுக்கே 4.85 ரூபாய்க்கு தான் அரசு முட்டைகளை கொள்முதல் செய்கிறது. கிராமப்புறங்களில் ஈமு கோழி வாங்கி ஏமாற்றமடைந்தது போல் யாரும் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திடம் தமிழக அரசு விசாரணை நடத்தி எந்த வகையில் முட்டைகளை வழங்குகின்றனர் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

கோவை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட முகவரியில் சென்று கோழிப் பண்ணையாளர்கள் சென்று பார்த்த நிலையில் அங்கு யாரும் இல்லை. இது தொடர்பாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரிடம் முறையிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X