மத நல்லிணக்கத்திற்கு பங்கம்; பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மத நல்லிணக்கத்திற்கு பங்கம்; பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்'

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (88)
Share
சென்னை : ''மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பாதிரியார், மத நல்லிணக்கம்,பீட்டர் அல்போன்ஸ்

சென்னை : ''மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil news



மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது ஆணையத்தின் நிலைப்பாடு. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சில நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் கல்வி கடன் வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X