தமிழ்நாடு

இனிமேல் இப்படித்தான்! சொன்ன வேலையை செய்யணும்: ஏமாற்றியவர்களுக்கு எச்சரிக்கை!

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை:அ.தி.மு.க., ஆட்சியில், கோவையில், நேரடி நியமன முறையில் நியமித்த, 325 துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாற்றுப்பணியை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ரத்து செய்தார். குப்பை அள்ளும் பணிக்காக, வார்டுகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.கோவை மாநகராட்சியில், 549 துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நேரடி நியமன முறையில், புதியவர்கள்
இனிமேல் இப்படித்தான்! சொன்ன வேலையை செய்யணும்: ஏமாற்றியவர்களுக்கு எச்சரிக்கை!

கோவை:அ.தி.மு.க., ஆட்சியில், கோவையில், நேரடி நியமன முறையில் நியமித்த, 325 துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாற்றுப்பணியை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ரத்து செய்தார். குப்பை அள்ளும் பணிக்காக, வார்டுகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில், 549 துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நேரடி நியமன முறையில், புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கல்வித்தகுதி அவசியமில்லை; அனைத்து ஜாதியினரும் பங்கேற்கலாம் என அறிவித்ததால், பட்டம் படித்தவர்கள் பலரும் விண்ணப்பித்து, வேலையில் சேர்ந்தனர். இதில், 325 பேர் இதர ஜாதியினர்.அரசியல் செல்வாக்குள்ள பலரும், குப்பை அள்ளச் செல்லாமல், மாற்றுப்பணி பெற்று, அலுவலக வேலை செய்தனர். பலருக்கும், கொரோனா கட்டுப்பாட்டு மையம் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் வருவாய் பிரிவு வேலை வழங்கப்பட்டிருந்தது.

சிலர் வேலையே செய்யாமல், ஓராண்டாக சம்பளம் பெற்று வந்தனர். இதற்கு, துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.ஏனெனில், துாய்மை பணியாளர்களில், பட்டம் படித்தவர்கள் மற்றும் சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு, இளநிலை உதவியாளர் பணி வழங்க, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அந்த உத்தரவை செயல்படுத்தாமல், புதிதாக துாய்மை பணிக்கு எடுத்தவர்களை அமர்த்தியதால், ஜாதி ரீதியாக, தங்களை பிரித்து, அலுவல் வேலை கொடுக்க மறுப்பதாக, அவர்கள் குற்றம் சாட்டினர்.இப்பிரச்னை தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், மண்டல உதவி கமிஷனர்களிடம் விசாரித்தார்.

மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்த கமிஷனர், அவர்களை வார்டு பணிக்கு மாற்றினார்.நியமன உத்தரவுப்படி, குப்பை அள்ளும் பணிக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் பணியாற்றிய அவ்வூழியர்கள் விடுவிக்கப்பட்டு, வார்டுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.கமிஷனரின் இந்த உத்தரவால், இது வரை சொகுசாகவும், வேலை பார்க்காமலும் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
27-ஜூலை-202112:02:16 IST Report Abuse
baala பணத்தை வாங்கி கொண்டு கேவல வேலை பார்க்கும் நபர்களுக்கு எப்போது தண்டனை?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-ஜூலை-202122:47:23 IST Report Abuse
S. Narayanan பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் அவர்களே வாழ்க நீர் எம்மான் இந்த "சீர்திருத்தங்கள்" செய்து முடிக்கவே ஓராண்டு போதாது போலிருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X