சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் துாக்கிட்டு தற்கொலை முயற்சி

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-பெண் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில்தனியார் நிதி நிறுவன மேனேஜர் மற்றும் ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 34; இவரதுமனைவி ஐஸ்வர்யா 28; விருத்தாசலம் பைவ் ஸ்டார் நிதி நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு மனை பத்திரத்தை கொடுத்து ரூ.2 லட்சம்

விருத்தாசலம்-பெண் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில்தனியார் நிதி நிறுவன மேனேஜர் மற்றும் ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 34; இவரதுமனைவி ஐஸ்வர்யா 28; விருத்தாசலம் பைவ் ஸ்டார் நிதி நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு மனை பத்திரத்தை கொடுத்து ரூ.2 லட்சம் வீட்டுக்கடன் பெற்றனர்.கொரோனா ஊரடங்கால், இரண்டு மாதங்களாக தவணைகட்டவில்லை. இதனால், கடந்த 20ம் தேதி கடன் தொகையை வசூலிக்க தனியார் நிறுவன ஊழியர்கள் அருள் வீட்டிற்கு சென்றனர்.அப்போது, அருள், ஐஸ்வர்யா கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.அவர்களது மகன்களை வெளியேற்றி, வீட்டை பூட்டி நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.இதில் அவமானம் தாங்காமல் ஐஸ்வர்யா துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், நிதி நிறுவன மேனேஜர் தோபியாஷ், ஊழியர்கள் சரவணன், கார்த்தி மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X