சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி பேக்கரி உரிமையாளர் உடல் 2 ஆண்டுக்கு பின் தோண்டி எடுப்பு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டி அருகே 2019ல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன்,55; இவர் ஏரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி கடை நடத்தி வந்தார்.கடந்த2019 ஏப்ரல் 1 ம் தேதி மணப்பாக்கம் விநாயகர்

பண்ருட்டி-பண்ருட்டி அருகே 2019ல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன்,55; இவர் ஏரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி கடை நடத்தி வந்தார்.கடந்த2019 ஏப்ரல் 1 ம் தேதி மணப்பாக்கம் விநாயகர் கோவில் அருகில் தலையில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தார். மது குடித்து விட்டு வரும் போது கீழே விழுந்து காயமடைந்து இறந்திருக்கலாம் என அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்து விட்டனர்.இந்நிலையில் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இட்லி வியாபாரம் செய்த மூதாட்டி சரசு 2019 ஜூன் 4ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மணப்பாக்கம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன்,29; மேல் அருங்குணம் பிரசன்னா என்ற வெங்கடேசன்,29; அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், 42; ஆகியோரை பண்ருட்டி போலீசார் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி கைது செய்தனர்.விசாரணையில், '2019 ஏப்ரல் 1ம் தேதி மணப்பாக்கம் விநாயகர் கோவில் அருகில் துாங்கிக் கொண்டிருந்த பேக்கரி உரிமையாளர் பத்மநாபன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த அரை சவரன் மோதிரங்கள் -2, ரூ. 13 ஆயிரத்தை திருடிச் சென்றதாக விஸ்வநாதன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.இதையடுத்து ஏப்ரல் 22 ம் தேதி பத்மநாபன் மகள் ராஜலட்சுமி,26; புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.பத்மநாபன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.நேற்று காலை 9:00 மணிக்கு மணப்பாக்கம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இடத்தில் தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் பத்மநாபன் உடலை தோண்டி எடுத்தனர்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர் கீதா அஞ்சலி தலைமையில் பிரேத பரிசோதனை செய்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X