பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயார்: அமைச்சர் பெரியகருப்பன் உறுதி

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-'தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது' என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் மற்றும் அரசு

தியாகதுருகம்-'தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது' என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.தியாகதுருகம் ஒன்றியம் வடதொரசலுார் ஊராட்சியில் குடிநீர் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகத்தைக் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அந்த நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.அரசு திட்டங்கள் கிராமங்களில் உள்ளவர்களுக்கு முழுமையாக சென்று சேர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். அதனால், மாவட்டம் தோறும் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப்பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறோம்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தி.மு.க., சார்பில் தொடரப்பட்ட வழக்காகும்.கடந்த ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்தனர்.அது அவர்களின் தோல்வி பயமாக கூட இருந்திருக்கலாம். தற்போது தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன்பேசினார்.அவசர பயணம்தியாகதுருகம் ஒன்றியம் வாழவந்தான்குப்பம், வடதொரசலுார் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.மதியம் 12:30 மணிக்கு முதல்வரிடம் இருந்து, அமைச்சருக்கு மொபைல் போன் அழைப்பு வந்தது.இதையடுத்து ஆய்வுப் பணிகளை பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் பொன்முடியுடன் அவசரமாக சென்னை புறப்பட்டுச் சென்றார்.இதனால் பல்லகச்சேரி, மலைக்கோட்டாலம், விளம்பார் ஆகிய ஊர்களில் ஆய்வுப் பணிக்கு அமைச்சர் வருவார் என காத்திருந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X