பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மதுக்கரை:வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நீர்ப்பாசன திட்டத்தில், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது.இதில், ஐந்து ஏக்கர் வரை வைத்துள்ள குறு, சிறு விவசாயிகள் நூறு சதவீதமும், ஐந்திற்கு மேற்பட்ட ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள், 75 சதவீதமும் மானியம் பெறலாம். இதற்காக, விவசாயி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், வருவாய்துறையிடம் பெற

மதுக்கரை:வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நீர்ப்பாசன திட்டத்தில், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது.இதில், ஐந்து ஏக்கர் வரை வைத்துள்ள குறு, சிறு விவசாயிகள் நூறு சதவீதமும், ஐந்திற்கு மேற்பட்ட ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள், 75 சதவீதமும் மானியம் பெறலாம். இதற்காக, விவசாயி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், வருவாய்துறையிடம் பெற வேண்டும்.இச்சான்றிதழ்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம், மதுக்கரை மார்க்கெட் பகுதியிலுள்ள தாலுகா அலுவலகத்தில் நாளை (24ம் தேதி), காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. இத்தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள், தங்களுக்கு தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என, மதுக்கரை வேளாண் உதவி இயக்குனர் ரத்னம் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X