பொது செய்தி

இந்தியா

மக்களுக்கு மாற்று இடம் வழங்க முதல்வரிடம் அ.தி.மு.க., மனு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உப்பளம் ராசு உடையார் தோட்டத்தில் வசிக்கும் குடும்பங்களை, ரயில்வே விரிவாக்கப் பணியை காரணம் காட்டி அகற்றினால், அவர்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்துள்ள மனு;உப்பளம் ராசு உடையார் தோட்டம் பகுதியில் கடந்த

புதுச்சேரி-உப்பளம் ராசு உடையார் தோட்டத்தில் வசிக்கும் குடும்பங்களை, ரயில்வே விரிவாக்கப் பணியை காரணம் காட்டி அகற்றினால், அவர்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்துள்ள மனு;உப்பளம் ராசு உடையார் தோட்டம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். விரிவாக்கம் செய்ய உள்ளதால் அந்த இடத்தை காலி செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் வற்புறுத்துகிறது.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் வேறு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.அந்த இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு தேவையா என கலெக்டர் தலைமையில் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இடம் ரயில்வேக்கு தேவை என கலெக்டர் கருதினால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து, வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X