பொது செய்தி

தமிழ்நாடு

'இசை மேதைகளின் மதிப்பும் மகத்துவமும் தெரியவில்லை'

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை, : ''மறைந்த இசைமேதைகளின் மதிப்பும் மகத்துவமும் நமக்கு தெரியவில்லை' என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.அவர் அளித்த பேட்டி:ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால் பாடல் என்பது எப்போதும் மலராக இளமையாக இருக்கும்.அந்த பாடல் தான் மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால் என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும்
Ilaiyaraaja, இசை மேதை, இளையராஜா

சென்னை, : ''மறைந்த இசைமேதைகளின் மதிப்பும் மகத்துவமும் நமக்கு தெரியவில்லை' என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

அவர் அளித்த பேட்டி:ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால் பாடல் என்பது எப்போதும் மலராக இளமையாக இருக்கும்.அந்த பாடல் தான் மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால் என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும். என் இசைப்பணி எப்போதும் போல தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

வெளிநாட்டில் பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து பராமரிக்கின்றனர். இங்கு நம் இசைமேதைகளின் இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா; தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே...


latest tamil news


இதுகுறித்து மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது விழா ஒன்றில் பேசியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். நமக்கு அதன் மதிப்பு மகத்துவம் தெரியவில்லை. பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்றதொரு விஷயத்தை செய்ய வேண்டும்.என் இசையில் நான் பாடவேண்டும். வரும் தலைமுறை பின்பற்றும்படி நான் நடந்து வருகிறேன்.

இசை மேதைகளுக்கு இங்கு சிலை வைக்கவில்லை என்பதை பார்க்கும் போது நம் உணர்வு அப்படி இருக்கிறது அவ்வளவுதான்.ரீமிக்ஸ் பாடல்களை எதிர்ப்பது என் வேலையல்ல. கேமராவில் என் முகத்தை காட்டக்கூடாது என நினைக்கிறேன். என் இசையில் என்னை பார்க்கலாம்.இவ்வாறு இளையராஜா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
23-ஜூலை-202115:25:53 IST Report Abuse
vivek c mani பழைமையின் பெருமையை நாம் எங்கு அறிந்தோம் அதை நன்கு பராமரிக்க?. நம் நாட்டில் இல்லாத கலை சிற்பங்களா ? தமிழ் நாட்டில் , கர்நாடகாவில், ஆந்திரத்தில், கேரளத்தில் என்று ஒவொன்றாக ஆரம்பித்து மேற்கே குஜராத் , ராஜஸ் தானிலும்,வடக்கே காஷ்மீரத்திலும், கிழக்கே அஸ்ஸாமிலும், இவெல்லா மாநிலங்களுக்கும் இடைப்பட்ட அணைத்து மாநிலங்களிலும் கலையும் , கற்சிற்பங்களும், ஓவியங்களும்,உன்னதமான மாளிகைகளும் கோபுரங்களும் ,மண்டி கிடைக்கின்றன. இக்கால நவீன கருவிகள் ஏதுமின்றி அக்காலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எப்படி படைத்தார்கள் என மூக்கில் விறல் வைக்கும் படி உள்ளது. இந்த பெருஞ்சொத்துக்களை பாதுகாத்தல் மிகவும் அவசியம். இக்கால தலைவர்கள் சின்னத்திற்கும் மற்ற அனாவசிய கொண்டாட்டங்களுக்கான செலவில் பத்தில் ஒரு பங்கு செலவிட்டாலே உன்னத புராதன பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு பிற்கால சந்ததியினருக்கு வழிகாட்டும். முன்னோர்களின் சரித்திரத்தை மறப்பது , உதாசீனம் செய்வது பெற்று வளர்ததவர்களை ஒதுக்கி வைத்தது போலாகும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
23-ஜூலை-202114:54:56 IST Report Abuse
elakkumanan ராஜா சார், ஒரு பொக்கிஷம்.........அவருக்கு கர்வம் இருக்கு ன்னும், இருக்க கூடாதுன்னும் ஒரு கும்பல் கூவுது.....நாற்பது வருடம், ஆயிரம் படம் என்றால், ஐயாயிரம் பாடல், ரெரெக்கோர்டிங் எல்லாம் சேர்த்து ஒரு மனிதன் தினமும் இருப்பது மணிநேரம் உழைத்தாலும் முடியாதாம்....இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை....அப்படி திறமை இருக்கும் ஒரு மகானிடம், அந்த திறமையை காணாமல், தொக்கி நிற்கும் கர்வத்தை (அது கர்வம் அல்ல, அவரின் உயரத்தில், பல தவிர்க்கமுடியாத தர்மசங்கடங்களை தவிர்க்க ஏற்படுத்திக்கொண்ட முகமூடி ) கவனிக்கும் மானிடா.................ஒரு அண்ணியையும் புடுங்காமல், ஆயிரம் ஆயிரம் கொடிகளை சுரண்டி கொழுத்த அரசியல் வியாதிகளையெல்லாம் சகிக்கும் மானிடா.....உண்மையிலேயே, டுமீல் குப்பம்.............எல்லா நல்ல விஷயங்களையும் கவனமாக ஒதுக்கி கொண்டு வாழும் குப்பமே..................அவர் இசை அமைப்பாளர் என்றால், அவரின் இசையை விமர்சிங்கப்பா..............நிறத்தையும், குணத்தையும் அல்ல................அப்போ, நம்ம ரெண்டு மூணு குடும்பம் கொண்ட அரசியல் வியாதிகள்?????????????நல்லா யோசிக்கிறானுவோ டுமீல்..............ஒரு பத்து படம் ஓடுனஓடனே, நம்ம ஹீரோ அடிக்கிற கூத்தெல்லாம் தெரியாதா டுமீல் குப்பத்துக்கு..............ராஜா சார்..............இசையின் உருவம்.....தெரியாவிடில், கண் மருத்துவரை நாடவும்..................
Rate this:
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
23-ஜூலை-202114:49:20 IST Report Abuse
R.Balasubramanian இளையராஜா மற்றும் சில மக்கள் இவரை ஞானி என்று சொல்கிறார்கள். சினிமா வில் ஞானி ஆக இருந்து புண்ணியம் இல்லை. பல மேதைகள் இருந்த போது (எம் ஸ் வி, டீ எம் ஸ், எஸ் பி பி உயிர் உடன் இருந்த போது இதை சொல்லி இருந்தால் இதை நாங்கள் நம்பி இருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X