பொது செய்தி

இந்தியா

கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தா? மத்திய அமைச்சர் மறுப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி : ''இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறினார்.லோக்சபாவில் நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது: கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமை என, அரசியல் சட்டம் தெரிவித்துள்ளது. இதை
கருத்து சுதந்திரம், ஆபத்து, ராஜிவ் சந்திரசேகர்

புதுடில்லி : ''இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறினார்.

லோக்சபாவில் நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது: கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமை என, அரசியல் சட்டம் தெரிவித்துள்ளது. இதை யாராலும் மீற முடியாது. அதனால் நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து என கூறப்படுவது தவறு; ஏற்க முடியாது.


latest tamil news


புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் சமீபத்தில் அமலுக்கு வந்தன. இதை ஏற்க மறுத்த, 'டுவிட்டர்' நிறுவனம் பிரச்னையை திசை திருப்ப, 'இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு உடனடியாக பதிலடி கொடுத்தது. இதன்பின் டுவிட்டர் நிறுவனம் குறைதீர் அதிகாரியை நியமித்ததோடு, புகார்கள் விபரங்களையும் தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு தான் எந்த சமூக வலைதள நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.இந்தியாவில் டுவிட்டர் உட்பட எந்த சமூக வலைதள நிறுவனங்களின் ஊழியர்களின் பாதுகாப்புக்கு, எந்த ஆபத்தும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
23-ஜூலை-202110:23:55 IST Report Abuse
GMM தவறான கருத்து சுதந்திரத்தை ஒழுங்கு படுத்த அரசுக்கு அதிகாரம் அவசியம் தேவை. தன் பாதிப்புக்கு நிவாரணம் கேட்கலாம். பிறரை பாதிக்கும் செயல், சொல் கருத்து சுதந்திரம் அல்ல. கருத்து திணிப்பு. இதனால் சண்டை சச்சரவு அதிகரிக்கும். ஒற்றுமை குறையும்.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
23-ஜூலை-202109:53:37 IST Report Abuse
ஆனந்த் கேடு கெட்டவன் என்று செந்தில் பாலாஜியை சொன்னது ஸ்டாலினின் கருத்து .. அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது அவர் உரிமை
Rate this:
Rajas - chennai,இந்தியா
23-ஜூலை-202114:20:26 IST Report Abuse
Rajasஅதிமுக ஊழல் கட்சி என்று அமித்ஷா சொன்னது பிஜேபி கட்சியின் கடமை. ஊழல் கட்சி என்று சொன்ன அதிமுகவுடன் அதே பிஜேபி கூட்டணி கேட்டு அலைந்தது பிஜேபியின் உரிமை....
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
23-ஜூலை-202109:53:37 IST Report Abuse
ஆனந்த் கேடு கெட்டவன் என்று செந்தில் பாலாஜியை சொன்னது ஸ்டாலினின் கருத்து .. அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது அவர் உரிமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X