வழக்கமா மனு எல்லாம் கொடுக்க மாட்டீர்களே. நேரடியா போராட்டத்தில் தானே இறங்குவீர்கள்...

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிர்மலா சீதாராமனை சந்தித்து, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடக் கோரி மனு அளித்தேன்.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்'வழக்கமாக மனு எல்லாம் கொடுக்க மாட்டீர்களே; நேரடியாக போராட்ட களத்தில் தானே குதிப்பீர்கள்... தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில்
வழக்கமா மனு எல்லாம் கொடுக்க மாட்டீர்களே. நேரடியா போராட்டத்தில் தானே இறங்குவீர்கள்...

மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிர்மலா சீதாராமனை சந்தித்து, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடக் கோரி மனு அளித்தேன்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'வழக்கமாக மனு எல்லாம் கொடுக்க மாட்டீர்களே; நேரடியாக போராட்ட களத்தில் தானே குதிப்பீர்கள்... தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் உள்ளதால், போராட்டத்தை மறந்து விட்டீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.



பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை ஒட்டு கேட்க முடியும் என்றால், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏன் திருத்த முடியாது... எனவே, உடனடியாக பழைய, பேப்பர் ஓட்டு முறைக்கு மாற வேண்டும்.
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா


'உங்களைப் போன்ற ஞானசூனியங்கள் எப்படித் தான், மத்திய அமைச்சராக இருந்ததோ என, ஆச்சர்யப்பட வைக்கும் வகையில், பா.ஜ., அதிருப்தியாளரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை.



தொழில் புரிய உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே லட்சியம்- என்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்படியெனில், கேரளாவின் 'கிட்டெக்ஸ்' நிறுவனம், தமிழகத்திற்கு வராமல், தெலுங்கானாவுக்கு சென்றது ஏன்?
- தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்


latest tamil news




'முதலில் கேரளாவை விட்டு அந்த நிறுவனம் வெளியேறியது ஏன் என, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்...' என, சொல்லத் தோன்றும்வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.



திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, மாநில உரிமை, மொழியுரிமை, ஹிந்துத்துவ எதிர்ப்புகளை வலியுறுத்தும் ஓர் அமைப்பு இங்கே கட்டப்பட வேண்டும் என்பது தான் என் கருத்து. இன்றைய காலகட்டத்தில், கமல் ஹாசனால் அதை வலிமையான கட்டமைப்பாக செய்ய முடியாவிட்டாலும், நாளை அது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.
- மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா


'நீங்கள் விரும்பும் அமைப்பு, தமிழகத்தில் உருவாக வாய்ப்பே இல்லை. எனவே, புத்திசாலி மாதிரி காட்டிக் கொள்ள, தொடர்ந்து இதுபோல பேசித் தான் ஆக வேண்டும்...' என, கூறத் துாண்டும் வகையில், நடிகர் கமல் ஹாசனின், மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா பேட்டி.



'பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுத்தர வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அவர் சொல்வதுபடி பார்த்தால், அ.தி.மு.க., சசிகலாவுக்கு தான் சொந்தமா... அவராக பார்த்து விட்டுக் கொடுத்தால் தான் உண்டா... இ.பி.எஸ்., நிலைமை இப்படிஆகிடுச்சே!
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'அது அவங்க பாடு... உங்களுக்கு என்ன... இரண்டு கம்யூ.,க்களையும் உங்களால் ஒன்றுபடுத்த முடியுமா... அதை செய்யுங்க முதலில்...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜூலை-202116:09:46 IST Report Abuse
Vena Suna இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
Rate this:
Cancel
23-ஜூலை-202113:30:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் மணல் கடத்தல் வேலையைச் செய்த அ.ம.மு.க-வினர், தி.மு.க. கொடியைக் கட்டிக்கொண்டு லாரிக்கு பாதுகாப்பாக வந்தால், செக்போஸ்டில் லாரியைப் போலீஸார் பிடிக்க மாட்டார்கள் என்றே காரில் தி.மு.க கொடிகட்டிக்கொண்டு வந்துள்ளனர்.
Rate this:
enkeyem - sathy,இந்தியா
23-ஜூலை-202117:29:50 IST Report Abuse
enkeyemஇது என்ன புது உருட்டா இருக்கு?...
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
23-ஜூலை-202112:40:42 IST Report Abuse
Mayavan Mayavan குருமாக்கு உப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X