பொது செய்தி

தமிழ்நாடு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்டில் தமிழகம் வருகை

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சட்டசபையில் கருணாநிதி படத்தை, ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் டில்லி சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, 'சென்னை மாகாண சட்டசபை இயங்கத் துவங்கி, 100 ஆண்டுகளாவதை ஒட்டி நடக்க உள்ள,நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும். சட்டசபையில்,
 ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்,   தமிழகம்

சென்னை: சட்டசபையில் கருணாநிதி படத்தை, ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் டில்லி சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, 'சென்னை மாகாண சட்டசபை இயங்கத் துவங்கி, 100 ஆண்டுகளாவதை ஒட்டி நடக்க உள்ள,நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும். சட்டசபையில், கருணாநிதி படத்தை திறந்து வைக்க வேண்டும்.'மதுரையில் அமைய உள்ள கருணாநிதி பெயரிலான நுாலகம், அடிக்கல் உள்ளிட்ட பல துவக்க பணிகள் தொடர்பாக அழைப்பு விடுத்தார்.அதை ஜனாதிபதி ஏற்றார். விழா தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


latest tamil news




அதேநேரம், நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள, ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரி, ராணுவ வீரர்கள் பயிற்சி மையம் சார்பில் நடக்கும், கொடி ஏற்பு விழா உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆக., 1ல் ஜனாதிபதி தமிழகம் வர உள்ளதாகவும், மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கியிருப்பார் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.எனவே, அப்போது கருணாநிதி படம் திறப்பு மற்றும் மற்ற விழாக்களும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டசபையில் கருணாநிதி படத்தை, எங்கு வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடந்துள்ளது. சட்டசபையில் ஏற்கனவே, 15 தலைவர்களின் உருவப்படங்கள் உள்ளன. கருணாநிதி படம், 16வது படமாக திறக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-202118:58:07 IST Report Abuse
அப்புசாமி எப்ப வேணும்னாலும் வாங்க போங்க. ஆனா, இந்த பாதுகாப்புன்னு சென்னை சாலைகளை அடைச்சு மக்களை முடக்குறதை மட்டும் கைவிடுங்க. பெரிய கொடுமை மக்களுக்கு. பேசாம மாறுவேஷத்தில் வந்துட்டு போகலாம்.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-202116:08:04 IST Report Abuse
Easwar Kamal என்ன மோடி போகலாம் என்று சொல்லி விட்டாரா?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
23-ஜூலை-202114:14:14 IST Report Abuse
தத்வமசி நன்றாக சரிபார்த்து விட்டு வரவும். இன்றே தொல்லியல் துறை மூலம் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிய மாட்டார்கள். ராஜ பரம்பரையில் பிறந்தவர்கள் போல தான் என்ன செய்கிறோமோ அது போல மற்றவை நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அதனால் குடியரசுத் தலைவர் நன்கு விசாரணை செய்து விட்டு வரவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X