பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திரதின தூண் அமைக்க இடம்: தொல்லியல் துறை தடையால் சர்ச்சை

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சுதந்திர தின நினைவு துாண் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பணிகளை செய்ய, தொல்லியல் துறை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சட்டசபை நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதே நாளில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம், சட்டசபை வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.அழைப்பு நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும்
சுதந்திர தின தூண்,  இடம், தொல்லியல் துறை, தடை, சர்ச்சை

சென்னை: சுதந்திர தின நினைவு துாண் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பணிகளை செய்ய, தொல்லியல் துறை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதே நாளில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம், சட்டசபை வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.


அழைப்பு


நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், சென்னை, காமராஜர் சாலையில், நினைவு துாண் அமைக்கப்பட உள்ளது. மும்பெரும் விழாவை போல, இந்நிகழ்ச்சிகளுக்கு, அரசு திட்டமிடப்பட்டு வருகிறது. சமீபத்தில், டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி, விரைவில் தேதி ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளார்.இதற்கிடையில், காமராஜர் சாலையில், போர் நினைவு சின்னம் அருகே, சுதந்திர தின நினைவு துாண் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறையினர், 'டெண்டர்' கோரி காலத்தை கடத்தாமல், தனியார் நிறுவனத்தை நேரடியாக தேர்வு செய்து, கட்டுமானத்திற்கான முன்னேற்பாடுகளை துவக்கிஉள்ளனர்.

புனித ஜார்ஜ் கோட்டை, போர் நினைவு சின்னம் என, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதிக்குள், இந்த இடம் வருகிறது. இதனால், அங்கு சுதந்திர தின துாண் கட்ட அனுமதி வழங்க வாய்ப்பில்லை என, தொல்லியல் துறையினர் கைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது. விதியை மீறி, சுதந்திர துாண் அமைத்தால், அதை அரசின் முக்கிய விருந்தினரால் திறந்து வைக்க இயலாது.இதனால், அவசரகதியில், இரண்டு நாட்களாக நடந்து வந்த பணிகள், நேற்று பிற்பகலுக்கு பின், தொய்வடைந்துள்ளன. நினைவு துாண் கட்ட தேர்வு செய்யப்பட்ட பகுதி வழியாக, இரவு நேரங்களில், துறைமுகத்திற்குள் கனரக சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால், நினைவு துாண் சேதம் அடைவதற்கு வாய்ப்புள்ளது.


latest tamil news
சர்ச்சை

இங்கு எந்த கட்டுமானமும் செய்ய முடியாது என்று தெரிந்து தான், ஜெயலலிதா ஆட்சியில், சட்டசபை வைர விழா, நினைவு வளைவு சற்று தள்ளி அமைக்கப்பட்டது. இது தெரிந்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், பொதுப்பணித் துறையினர் பணிகளை மேற்கொண்டு வருவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-202118:33:35 IST Report Abuse
ராஜா முதலில் இருக்கும் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கட்டும் அப்புறம் கட்டலாம் தூண்களை.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
23-ஜூலை-202114:10:02 IST Report Abuse
தத்வமசி செட் போட பல சினிமா பிரபலங்கள் உள்ளனர். அவர்களை வைத்து முன்பு சட்டமன்ற தண்ணீர் தொட்டி அமைத்தது போல அமைத்து விடலாம்.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
23-ஜூலை-202114:07:55 IST Report Abuse
Vivekanandan Mahalingam கோட்டை மத்திய அரசின் கீழ் உள்ளது. இவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும். மஹாபலிபுரம் அருகே தலைமை செயலகத்தை மாற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X