பொது செய்தி

இந்தியா

கொரோனாவின் கோரம்: 2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் கடந்த ஏப்ரல்,

புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:


latest tamil news




இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 158, ஆந்திராவில் 119, மகாராஷ்டிரத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். 'இந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்' என, சம்பந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எங்கள் அமைச்சகத்தையும், கல்வி அமைச்சகத்தையும் கேட்டுள்ளன.



latest tamil news



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
23-ஜூலை-202117:06:30 IST Report Abuse
unmaitamil செய்தியை கவனமா போடுங்க . நம்ம திருட்டு தமிழ் டிவி காரனுங்க 650,குழந்தைகள் உபி மாநிலத்தில் காரனாவால் இறப்புன்னு செய்தி போற்றுவானுங்க. அதற்கு நாய்கள் குறைப்பதுபோல் பல பட்டிமன்றமே நடத்திருவானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X