உலக அளவில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் டெல்டா வைரசால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெனிவா: உலகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும்

ஜெனிவா: உலகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news



உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது ஆய்வில் தெரிவந்து உள்ளது.


latest tamil news


இதன் பாதிப்பையும் பரவலையும் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், பல ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது. வளர்ந்த நாடுகள் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கடைத்தால் மட்டுமே, கோவிட் பாதிப்பில் இருந்து முழுமையா விடுபட முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manithan - Erode,இந்தியா
23-ஜூலை-202115:11:44 IST Report Abuse
Manithan உலக அளவில் அல்ல பாதிக்கப்பட்ட அளவில்
Rate this:
Cancel
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
23-ஜூலை-202115:08:54 IST Report Abuse
guru made in china வை விட Make in India தரமானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X