பொது செய்தி

இந்தியா

குஜராத்தில் வரும் 26ல் 9 - 11ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அகமதாபாத்: கோவிட் 2வது அலையால் நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஒரு சில மாநிலங்கள் விரைவில் பள்ளிகளை திறக்க உள்ளதாக அறிவித்து வருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் ஆக., 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்

அகமதாபாத்: கோவிட் 2வது அலையால் நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.



latest tamil news




ஒரு சில மாநிலங்கள் விரைவில் பள்ளிகளை திறக்க உள்ளதாக அறிவித்து வருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் ஆக., 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news




இந்நிலையில் குஜராத் மாநில அரசு, 'குஜராத்தில் நேற்று புதிதாக 36 பேருக்கு மட்டுமே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 370 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்1 வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26ம் -தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்கள், தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
23-ஜூலை-202114:18:59 IST Report Abuse
தத்வமசி தமிழகத்தில் பிரியாணி கடைகளை எப்போதோ திறந்து விட்டார்கள். சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஓடிடிடியில் நல்ல பைசா வருவதால் இப்போது எந்த நடிகனும் தியேட்டர் திறப்பது பற்றி பேசவில்லை. கல்வியா? எதற்கு ? மூன்றாவது அலை வரப்போகிறதாம். வரட்டும். அதுவரை பசங்க வீட்டிலேயே என்ஜாய் பண்ணட்டும். படிப்பு சார்? படித்து என்ன பண்ணப் போகிறான்? கொரோனா சார்..
Rate this:
Cancel
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
23-ஜூலை-202112:27:13 IST Report Abuse
Kannan Chandran நாங்க சினிமா தியேட்டரை (முன்களப்பணி) எப்பொழுது திறக்கலாம் என்பதை தொலைக்காட்சி விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
23-ஜூலை-202111:59:02 IST Report Abuse
Rengaraj கொரோனா தடுப்பில் குஜராத் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X