முடிவுக்கு வந்தது பிரச்னை: முதல்வர் அமரீந்தர் சிங் - சித்து சந்திப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையில் நிலவி வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் அமரீந்தருக்கும்,
Punjab, Sidhu, Amarinder Singh, Meet, Newly Appointed, Congress Chief, Punjab CM, Punjab Bhawan

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையில் நிலவி வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் அமரீந்தருக்கும், மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். மேலும், நான்கு செயல் தலைவர்களும் அப்போது நியமிக்கப்பட்டனர். அமரீந்தரின் எதிர்ப்பை மீறி சித்து நியமிக்கப்பட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


பின் இருவரின் சந்திப்பும் நிகழும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் தன்னை அவதுாறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, சித்துவை சந்திக்கப்போவது இல்லை என, அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மாநில காங்., தலைவராக சித்து இன்று (ஜூலை 23) பொறுப்பேற்க உள்ளார். அதில் பங்கேற்க முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பிற்கு முன்னதாக முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தில் சித்துவும் நேரடியாக பங்கேற்று, முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்விற்கு பிறகு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிகழ்வில் முதல்வர் உள்பட அனைத்து எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்மூலம், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரசில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

பஞ்சாப் நிலவரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறுகையில், பஞ்சாபில் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துவிட்டது. அதனை நீங்கள் பார்க்கலாம் என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜூலை-202116:00:39 IST Report Abuse
Vena Suna முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
23-ஜூலை-202114:42:15 IST Report Abuse
Shekar மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் வண்டி ஓடாது
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
23-ஜூலை-202113:09:58 IST Report Abuse
Mayavan Mayavan நான் ஒரு சித்து நீ ஒரு மொத்த்து ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X