புதுடில்லி: ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்த திரிணமுல் காங்., எம்.பி., ஷாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
'மொபைல் போன்' உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில் நேற்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்க துவங்கினார்.அப்போது அமைச்சர் வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பறித்த திரிணமுல் காங்., - எம்.பி., ஷாந்தனு சென், அதை சுக்கு நுாறாக கிழித்தார். இவருடன் மேலும் சில திரிணமுல் எம்.பி.,க்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மேற்கு வங்கத்தில் வன்முறை கலாசாரத்திற்கு பெயர் போன திரிணமுல் காங்கிரஸ், அதனை பார்லிமென்டிற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

ராஜ்யசபா தலைவரான, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், அவையில் நடந்த நிகழ்வுகள் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழிக்கும் அளவுக்கு அவை நடவடிக்கைகள் தரம் தாழ்ந்து போனது துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற நடவடிக்கைகள் நமது பார்லிமென்ட் ஜனநாயகம் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் எனக்கூறியதுடன், ஷாந்தனு சென்னை சஸ்பெண்ட் செய்தும், இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE