பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
வாஷிங்டன்: மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா மற்றும் கோஸ்டா ரிக்காவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: பனாமா பகுதிகளில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பனாமாவின் பசுபிக் பெருங்கடலின்

வாஷிங்டன்: மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா மற்றும் கோஸ்டா ரிக்காவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: பனாமா பகுதிகளில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பனாமாவின் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. அப்பகுதி கோஸ்டாரிக்காவின் எல்லை என்பதால் அங்கேயும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.


latest tamil news


அதேபோல் இரண்டு மணி நேரத்திற்கு பின் அப்பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவில், 6.3 ஆகப் பதிவானது. பனாமாவின் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது. இதே பகுதியில் மூன்று நாட்களுக்கு முன் நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பல பகுதிகள் வீடுகள் இடிந்தன. ஆனால், இதனால் ஏற்பட்ட சேதம், பாதிப்புகள் குறித்த முழு தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X